இரணியல் அருகே கல்லூரி மாணவர் திடீர் மாயம்

கன்னியாகுமரி மாவட்டம், கோணம் பகுதியில் கல்லூரி மாணவர் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-04-27 12:13 GMT

மாணவர் மாயம்

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள இரணியல் கோணம் பகுதி சேர்ந்தவர் ஜெயசேகரன் (54). இவர் மத்திய ஆயுதப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இளைய மகன் நிஷாந்த் (23) கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்சிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார்.   இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி கல்லூரி ப்ராஜெக்ட் ரிப்போர்ட் சமர்ப்பித்து விட்டு வருவதாக கூறி கோயம்புத்தூர் சென்றுள்ளார். ஆனால் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

Advertisement

சம்பந்தப்பட்ட கல்லூரியில் நிஷாந்த் குறித்து கேட்டபோது அவர் கல்லூரிக்கு வரவில்லை என கூறிவிட்டனர். உறவினர்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் நிஷாந்த் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து ஜெயசேகரன் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நிஷாந்த் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் காணாமல் போன சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News