மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்
மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி மாயம். போலீசில் புகார்.;
Update: 2024-03-14 11:25 GMT
கல்லூரி மாணவி மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே படர்நிலம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகள் ஜெனிகா (19). இவர் நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு ஜெனிகா சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை விஜயகுமார் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி ஜெனிகாவை தேடி வருகின்றனர்.