கல்லூரி ஆசிரியர்கள் பணி நிலுவைத் தொகை: வழங்க கோரி போராட்டம்

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்லூரி ஆசிரியர்களின் பணி மேம்பாட்டிற்கான நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க கோரி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.

Update: 2024-06-24 15:27 GMT

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்லூரி ஆசிரியர்களின் பணி மேம்பாட்டிற்கான நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க கோரி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.


 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு இணை பேராசிரியர்ஊதியம் உட்பட அனைத்து ஊதியங்களும் வழங்கிட தேவையான நிதியை தமிழ்நாடு அரசு நிதித்துறை ஒதுக்கிய நிலையில் அரசு அரசாணையும் வெளியிட்டது. ஆனால் இதுவரை எந்தவித நிலுவைத் தொகையையும் அரசு வழங்கவில்லை,இதனைக் கண்டித்து மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு மூட்டா அமைப்பு சார்பாக கல்லூரி பேராசிரியர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இணை பேராசிரியர் உட்பட அனைத்து பணி மேம்பாட்டிற்கான ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியபடி பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களில் மட்டும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு ஊதியம் வழங்கியது எப்படி இதில் கண்டிப்பாக முறைகேடுகள் நிகழ்ந்துள்ளது என கேள்வி எழுப்பினர். நிதித்துறை நிதி ஒதுக்கியும் நிதியினை சரிவர பயன்படுத்தாமல் இருக்க கட்டளையிட்டது யார் என்றும் இதில் உயர் கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் எனவே உயர் கல்வித் துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர் மற்றும் அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.

இந்தப் போராட்டத்தில் மதுரை சிவகங்கை திண்டுக்கல் விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பேராசிரியைகள்,மூட்டா மண்டல தலைவர்கள் ரமேஷ்ராஜ் ஞானேஸ்வரன் துணைத் தலைவர் பெரியசாமி ராஜா மண்டல செயலாளர்கள் ராபர்ட் திலீபன் வில்சன் பாஸ்கர் முதலாம் மண்டல பொருளாளர் தேவகி துரைசிங் முட்டா தலைவர் செந்தாமரைக்கண்ணன் இரண்டாம் மண்டல பொருளாளர் பிரபாகரன்

Tags:    

Similar News