தர்மபுரியில் தொழிலதிபர் டி.என். சின்னசாமி நினைவு நாள் அனுசரிப்பு
தர்மபுரியில் தொழிலதிபர் டி.என். சின்னசாமி நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.;
தொழிலதிபர் டி என் சின்னசாமி நினைவு நாள் அனுசரிப்பு
தர்மபுரி டி.என்.சி. குரூப் நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான டி.என். சின்னசாமி 20-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி டி.என்.சி. சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன வளாகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி நிறுவனங்களில் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், டி.என்.சி. சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் டி.என்.சி. இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கி டி.என். சின்னசாமி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகநாதன், பிரேம், தி.மு.க. நகர செயலாளர் நாட்டான் மாது, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மண்டல மேலாளர் விவேகானந்தன், தர்மபுரி கிளை மேலாளர் சுப்ரமணியன், ட்ரீம் அலையன்ஸ் நிர்வாகி சக்கரவர்த்தி மற்றும் காமராஜ், பரணி, தனபால், லோகு, கிருஷ்ணமூர்த்தி, குமரவேல் உள்ளிட்ட பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் மற்றும் டி.என்.சி. குரூப் நிறுவனங்களிலும் தொழிலதிபர் டி.என். சின்னசாமி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.