எம்ஜிஆரின் நினைவு தினம் அனுசரிப்பு

படாளத்தில் எம்ஜிஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-12-25 08:51 GMT
எம்ஜிஆரின் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆரின் 36-ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு,நேற்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி படாளம் கூட்ரோட்டில் அமைந்துள்ள அவரது உருவ படத்திற்கு,மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குமரன் ஏற்ப்பட்டில், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் K.மரகதம் குமரவேல் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..இந்நிகழ்வின் போது ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்துகொண்டனர்..

Tags:    

Similar News