பாசன கால்வாயில் கழிவுகள் அகற்றும் பணி துவக்கம்

இரணியல் அருகே பாசன கால்வாயில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றும் பணியை விஜய்வசந்த் எம்.பி தனது சொந்த நிதியில் துவக்கி வைத்தார்.;

Update: 2023-12-31 11:26 GMT
கால்வாய் தூர் வாரும் பணி துவக்கம் .
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பிரிவு கால்வாய், லட்சுமிபுரம் - சேரமங்கலம் கிளை கால்வாய்களில் மிகுதியான கழிவுகள் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையிலும், தண்ணீர் கடைமடை விவசாயிகளை சென்று சேராத நிலையிலும் காணப்பட்டு வந்தது.   இந்த நிலையில் இந்த கால்வாய்களை சுத்தம் செய்ய அப்பகுதி பொது மக்கள் சார்பில்,  பாசன தலைவர் ஜேசுதாஸ் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் வழக்கறிஞர் ஜான் சௌந்தர் ஆகியோர் விஜய் வசந்த் எம்.பி - யை  சந்தித்து கால்வாயை சுத்தம் செய்திட உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.        கோரிக்கையின் பேரில் விஜய் வசந்த எம்.பி தனது சொந்த நிதியில் ஜேசிபி எந்திரத்தின் மூலம் கழிவுகளை அகற்றிட உதவி செய்வதாக உறுதி அளித்தார்.  இதை அடுத்து கழிவுகளை அகற்றி தூர் வாரும் பணிகள் லட்சுமிபுரம் பகுதியில் துவங்கப்பட்டது.    இந்த பணியை  கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் மனோகரசிங் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News