லஞ்ச வழக்கில் வணிக வரி அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை

வியாபாரியிடம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வணிக வரி அலுவலருக்கு கும்பகோணம் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

Update: 2023-12-19 04:12 GMT
வணிக வரி அலுவலர் ஸ்ரீதரன்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வடசேரியைச் சேர்ந்தவர் பக்தவச்சலம். இவர் செய்து வந்த வியாபாரம் சரியாக நடைபெறாததால், வணிக வரித் துறைக்கு 2007 ஆம் ஆண்டில் பூஜ்ய அறிக்கையை அனுப்பினார். இதைத்தொடர்ந்து, பக்தவச்சலத்தை பட்டுக்கோட்டை வணிக வரி அலுவலர் ஸ்ரீதரன் (தற்போது 70 வயது) வரவழைத்து தனக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றும், தங்களிடமுள்ள ரசீதுகளை எடுத்து வருமாறும், முதலில் ரூ. ஆயிரம் கொண்டு வருமாறும் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பக்தவச்சலம் இது குறித்து தஞ்சாவூர் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில், ஊழல் தடுப்பு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து, பக்தவச்சலத்திடம் 2007, செப்டம்பர் 12 ஆம் தேதி லஞ்சம் வாங்கிய ஸ்ரீதரனை கைது செய்தனர். இது தொடர்பாக கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி டி. சண்முகப்ரியா விசாரித்து ஸ்ரீதரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News