பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் வர்த்தக பயன்பாட்டிற்கு அனுமதியில்லை
பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகள், சாலையை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Update: 2024-01-10 11:48 GMT
பழனி கோவிலை சுற்றி உள்ள வீதிகளை, வர்த்தக பயன்பாட்டிற்கு உபயோகிக்கக் கூடாது கோவிலை சுற்றியுள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பக்தர்கள் வரும் முருகன் கோயிலில் இது மாதிரியான சம்பவங்கள் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கும். பக்தர்களுக்கு இடையூறாக எது இருந்தாலும் அது தவறானது.கிரிவலப் பாதையில் வாகனங்கள் வராமல் இருக்க, பிரதான சாலை இணைப்பில் தடுப்பு அமைக்கவும் உத்தரவிடப்படுகிறது. பழனி கோவில் கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.