காவலர்களுக்கான மருத்துவ சிகிச்சை தொகையை வழங்கிய மாநகர காவல் ஆணையர்
மதுரையில் காவலர்களுக்கான மருத்துவ சிகிச்சை தொகையை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்.;
Update: 2024-05-11 01:48 GMT
மதுரையில் காவலர்களுக்கான மருத்துவ சிகிச்சை தொகையை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்.
மாநகரக் காவல் துறையைச் சோ்ந்த 9 பேருக்கு மருத்துவச் சிகிச்சை செலவுத் தொகை ரூ. 10.98 லட்சத்தை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் வியாழக்கிழமை வழங்கினாா். மதுரை மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலா்கள் உடல்நலக் குறைவால் மருத்துவச் சிகிச்சைக்கு செலவழித்த தொகை தமிழ்நாடு காவலா் நல நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, மதுரை மாநகரக் காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு, ஆயுதப்படை, போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் காவல் துறையினா் 9 போ் தங்களது மருத்துவச் சிகிச்சைக்கு செலவழித்த தொகையான ரூ.10.98 லட்சம் தமிழ்நாடு காவலா் நல நிதியில் இருந்து பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவலா்களிடம் வழங்கப்பட்டது. மதுரை மாநகரக் காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பங்கேற்று, காவல் துறை அதிகாரிகள்,காவலா்களுக்கு இதற்கான காசோலைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் துணை ஆணையா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.