காப்பீட்டு திட்ட இழப்பீடு காசோலையை வழங்கிய ஆணையர்
தல்லாகுளம் பகுதியில் விபத்தில் மரணம் அடைந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு விபத்து காப்பீடு திட்டம் மூலமாக இழப்பீடு காசோலையை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழங்கினார்.;
Update: 2024-01-31 11:18 GMT
இழப்பீட்டு தொகை வழங்கல்
கடந்த 18.11.2023 அன்று திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் இருந்த தெற்கு வாசல் போக்குவரத்து பிரிவு சார்பு ஆய்வாளர் முருகன் என்பவர் வாகன விபத்திற்குள்ளாகி அகால மரணமடைந்தார். மறைந்த சார்பு ஆய்வாளரின் குடும்பத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி அம்மன் சன்னதி கிளையில் இருந்து விபத்து காப்பீடு திட்டம் மூலமாக இழப்பீடு மற்றும் குழந்தைகள் கல்வி காப்பீடு தொகை ரூ.78,00,000/- கான காசோலைகளை மரணம் அடைந்த சார்பு ஆய்வாளரின் மனைவி சத்யா என்பவருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் வழங்கினார்.