நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்.

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-17 07:39 GMT

 அன்மையில் நீட் தேர்வு முறைகேடு வெளியானதை தொடர்ந்து தேர்வு நிர்வாகத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் லட்சுமி காந்தன், தங்கவேல், பரமத்தி தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குப்புசாமி, தோகமலை ஒன்றியத்தை சேர்ந்த கணேசன், சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் வடிவேலன், கரூர் நகர செயலாளர் கார்த்திகேயன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி முறையான விசாரணை நடத்த கோரியும், முறைகேட்டில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News