மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-06-21 09:34 GMT

மதுரை பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


மதுரை மாவட்டத்திலுள்ள பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலையில் தொழிலாளருக்கு பணிக்கொடை வழங்கு கோரி மதுரையில் சிஐடியு மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டஆட்சியரே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை நிர்வாகமே மூடப்பட்டுள்ள பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த 140 தொழிலாளர்களுக்கு பணிக்கொடை(Gratuity) வழங்கும்படி மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பைய.W.P. (MD)No 445/2023 உடனடியாக நிறைவேற்று ஆலை மூடப்பட்டு 20 ஆண்டுகள் ஆன போதிலும் வேலை பார்த்த தொழிலாளருக்கு அடிப்படைத்.தொகை எதுவும் வழங்காமல் அலைக்கழிப்பது சரியா? உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை அருகில்சிஐடியு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள்சங்கம் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார் இதில் பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் சி ஐ டி யு அனைத்து நிர்வாகிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News