சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது புகார்!
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-04-27 06:00 GMT
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் பௌர்ணமி நாட்களில் கள்ளத் துப்பாக்கியுடன் வந்து வனக்கல்லூரி பேராசிரியர் தோட்டத்தில் பல லட்சம் மதிப்பிலான சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. வனத்துறை மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறுமலையில் தொடர்ந்து சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. அடர்ந்த வனப் பகுதியாக இருப்பதால் சந்தன மரங்கள் ஓரளவு வளரக்கூடிய பகுதி என்பதால் பலர் தோட்டங்களில் வளர்க்கின்றனர். இதை அறிந்த கொள்ளையர்கள் விலை உயர்ந்த சந்தன மரங்களை தொடர்ந்து வெட்டி கடத்துகின்றனர். இதனால் மரங்களை வளர்ப்பவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து சென்ற போதும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசாரும் வனத்துறையினரும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.