விருதுநகரில் ஐஎப்எஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
விருதுநகரில் நிலத்தைப் பெற்றுக் கொண்டு பல கோடி பணத்தை வழங்காத IFS அதிகாரி அவர் மனைவி மற்றும் மீது நடவடிக்கை எடுக்க கூறி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியைச் சார்ந்தவர் சின்னச்சாமி வயது (61) இவர் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இவருடைய சொந்த தேவைக்காக நிலத்தை விற்பனை செய்ய நினைத்த இவரை ராஜபாளையத்தைச் சார்ந்த நிலத் தரகர் ராஜா என்பவர் தொடர்பு கொண்டதாகவும் உங்கள் நிலத்தை குஜராத்தில் பணிபுரியும் IFS அதிகாரி கருப்பசாமி வாங்கிக் கொள்வதாக கூறி நிலத்தை 4 கோடியே 67 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் என பேசி முடித்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பல தவணைகளாக சின்னச்சாமி கருப்பசாமியிடம் 50 லட்சம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 50 லட்சம் பெற்ற சின்னச்சாமியை நிலத்தை தனது மனைவியின் அக்காவான விந்தியா என்பவரின் பெயருக்கும் அவரின் மகன் அப்துல் அஜீஸ் என்பவர் பெயரில் பத்திரபதிவு செய்து தர கூறியதாகவும் அதன் பின்பு மீதமுள்ள பணத்தை தருவதாகவும் கருப்பசாமி கூறியுள்ளார்.
இதை நம்பி சின்னச்சாமி நிலத்தை அவர்கள் பேருக்கு மாற்றியதாகவும் கூறப்படுகிறது இதை அடுத்து மீதமுள்ள தொகையை கேட்டு சின்னசாமி பலமுறை கருப்பசாமியை தொடர்பு கொண்ட பொழுது கருப்பசாமி பணத்தை தர மறுத்ததாக கூறப்படுகிறது.
தனது நிலத்திற்க்கான பணத்தை பெற்று தரக் கூறி சின்னச்சாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதேபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை ஆறு கோடி ரூபாய்க்கு கருப்பசாமி என்பவருக்கு விற்பனை செய்வதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது ஒப்பந்தத்தின்படி 27 லட்சத்தை பெற்றுக் கொண்ட குருசாமியை தனது மனைவியின் சகோதரியின் மகனான அப்துல் அஜீஸ் பெயரில் நிலத்தை பத்திர பதிவு செய்து தர கூறியுள்ளர்.
அதை நம்பி குருசாமி அவர் பெயருக்கு நிலத்தை மாற்றி பின்பு மீதமுள்ள பல கோடி ரூபாய் தர கருப்பசாமி மறுப்பதாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி தாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர கோரி இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தனித்தனியாக புகார் அளித்தனர்.