மாடுகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார்
பொம்மரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள், தன்னுடைய மாடுகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் எஸ்பியிடம் மனு அளித்தார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே பொம்மரசம்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மாடு மற்றும் ஆடுகள் வைத்து பராமரித்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 28 ம் தேதி இரவு என்னுடைய இரண்டு மாடுகளை ஒரு சிலர் திருடி சென்றனர். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் சந்தேகத்திற்கு இடமான மூன்று பேரை போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த மூன்று பேரும் என்னை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர்.
அவர்கள் தாக்குதலில் உட்காயம் அடைந்த நான் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன் இதுகுறித்து மீண்டும் பாப்பாரப்பட்டி போலீசார் என்னிடம் மருத்துவமனையில் விசாரணை செய்து அறிக்கை எடுத்துச் சென்றனர். பின்னர் இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் என்னை தாக்கியவர்கள் மீதும் மாடுகளை திருடி சென்றவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் மாடுகளை திருடி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது இரண்டு மாடுகளையும் மீட்டு தர வேண்டும் என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.