அவசரகால வெளியேறும் வழியில்லாமல் திரையரங்கம் கட்டப்படுவதாக புகார்
பள்ளிபாளையத்தில் தனியார் திரையரங்கம் ஒன்று அவசரகால வெளியேறும் வழியில்லாமல் கட்டப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்ற அழகர்சாமி நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது, பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில் அமைந்துள்ள தனியார் திரையரங்கில் புதிதாக இரண்டு அடுக்குமாடி திரையரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு அவசர வழிப்பாதை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள அவசரகால வெளியேறும் பாதையை மறைத்து, புதிய திரையரங்கங்கள் கட்டப்பட்டு வருகிறது . இதன் காரணமாக விபத்து போன்ற சமயங்களில் பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நகரின் பல்வேறு திரையரங்கம் மற்றும் மால்களில் அவசர கால வழி உள்ளது. இருந்தும் அங்கு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது .ஆனால் இங்கு அவசரகால வழியே இல்லாத நிலை உள்ளதால், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இந்த திரையரங்கத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.