புதுக்கோட்டையில் கணினி கற்றல் போக்குகள் கருத்தரங்கு

புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் கணினி கற்றல் கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-03-08 06:56 GMT

கருத்தரங்கம் 

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் கணினி கற்றலில் சமீபத்திய போக்குகள் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் துறைகள் சார்பில் கருத்தரங்குக்கு கல்விக் குழுமத் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார்.

இயக்குநர் மா. குமுதா, முதல்வர் செ. கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி கணினிஅறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் எஸ். பீர்பாஷா கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

கோவை கற்பகம் உயர் கல்விக் கழகத்தின் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் என். கனகராஜ் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தலில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கிப் பேசினார். முன்னதாக உதவிப் பேராசிரியர் மாலதி வரவேற்றார்.முடிவில் ஜெ. பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

Tags:    

Similar News