கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்கம்
அணைக்கரை பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின் மேரி துவக்கி வைத்தார்.
Update: 2024-03-15 12:13 GMT
குமரன்குடி ஊராட்சிக்குட்பட்ட அணைக்கரை குருசடி முதல் பள்ளிக்கூடம் வரை சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையை செப்பனிட கேட்டு அந்த பகுதி மக்கள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.9.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கான்கிரீட் சாலை அமைக்க மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து சாலை அமைக்கும் பணியை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெபா, பங்குப்பணியாளர் ஜாண்ஷிபு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆஸ்டின்ஜிஜோ, காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கநாடார், ஜஸ்டின் உட்பட பலர் கலந்துகொண்டனர்