தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் குடியிருப்போர் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம்
By : King 24X7 News (B)
Update: 2023-11-07 08:36 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்து சமய அறநிலைத்துறையும் திமுக அரசையும் கண்டித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் குடியிருப்போர் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கில் இந்து சமய அறநிலைத்துறையிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சட்டமுறைப்படி கிரயம் பெறப்பட்டு வீட்டுமனைகள் நிர்ணயத்து வகைப்படுத்தப்பட்டு கட்டிடங்கள் கட்டி வீடுகளாக பொதுமக்களுக்கு முறையாக விற்பனை செய்யப்பட்டது என தெரிந்தும் இந்து சமய அறநிலைத்துறை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் என பொய்யான தகவலை ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு அளித்து எவ்வித ஆவணங்களும் பதிவு செய்ய விடாமல் தடுத்துவரும் இந்து சமய அறநிலைத்துறை, ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் ஆய்வாளரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இடங்கள் எவ்வித பத்திரப்பதிவும் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதை அரசு அதிகாரிகளுடன் பலமுறை வலியுறுத்தியும் தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வரும் விடியா திமுக அரசை கண்டித்தும்,தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால் வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் புதிய நிழற்குடை,குடிநீர் வசதி, வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் குடியிருப்பில் 850-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் புதிய கட்டிடத்துடன் ரேசன் கடை அமைக்க கோரியும் அப்பகுதி பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மதுரை டு தேசிய நெடுஞ்சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்பாட்டத்தில் விடியா திமுக அரசையும்,இந்து சமய அறநிலைத்துறையும் கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது. உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால் அடுத்த கட்டமாக பொதுமக்களை திரட்டி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.