சில்லறை இல்லாததால் கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கிவிட்ட நடத்துனர்

தஞ்சாவூரில் இருந்து ராஜகிரி செல்ல தனியார் பஸ்சில் பயணித்த கர்ப்பிணி பெண்ணிடம், சில்லறை இல்லாததால் நடத்துனர் பாதி வழியிலேயே இறக்கிவிட்டதால் பரபரப்பு உண்டானது.

Update: 2024-06-27 04:43 GMT

பைல் படம் 

சில்லறை இல்லை கர்ப்பிணி பெண்ணை நடு ரோட்டில் இறக்கிவிட்ட நடத்துனர் கர்ப்பிணி என்றும் பாராமல் நடு ரோட்டில் இறக்கிவிட்ட அவலம் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்தில் சில்லறை இல்லாத காரணத்தினால் பாதியில் இறக்கி விடப்பட்ட கர்ப்பிணி பெண் தஞ்சாவூரில் இருந்து ராஜகிரி செல்வதற்காக தனியார் பேருந்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஏறியுள்ளார் பாதி தூரம் சென்றவுடன் பஸ் கண்டக்டர் டிக்கெட் கேட்டுள்ளார்

அப்போது 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்ட கர்ப்பிணி பெண்ணை சில்லரை வேண்டும் என கூறி கண்டக்டர் பாதி வழியில் நிறுத்தி கர்ப்பிணி பெண்ணை பசுபதிகோவில் என்ற இடத்தில் இறங்குமாறு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இறக்கி விட்டுள்ளார். பஸ்ஸில் ஏறும்போதே சில்லறை இருக்கா என கேட்காமல் பஸ்ஸில் ஏறி டிக்கெட் கேட்கும் போது சில்லரை இல்லாத காரணத்தினால் கீழே இறக்கி விடுவது போன்று அடாவடி சம்பவத்தில் தனியார் பேருந்து கண்டக்டர்கள் செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

Tags:    

Similar News