இடைக்கால பட்ஜெட்டிற்க்கு இந்திய தொழில் கூட்டமைப்பினர் வரவேற்பு
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது கடைசி மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது.தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.இடைக்கால பட்ஜெட் தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவ்வமைப்பை சேர்ந்த செந்தில் கணேஷ் இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரயில்,விமானம்,சாலை மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம் வாய்ந்தாக அமையும் என்றார்.
உலக அளவில் டிஜிட்டல் முதலீடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளதாகவும் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்துவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளதை வரவேற்பதாக தெரிவித்தார்.தனிநபர் வருமானம் அதிகரித்து வருவதாகவும் சோலார் எனர்ஜிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.இதனையடுத்துபேசிய அவ்வமைப்பை சேர்ந்த ராதாகிருஷ்ணன் “கடந்த 5 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது எனவும் பட்ஜெட்டில் மூன்று ரயில் காரிடர்களை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த ரயில்வே காரிடர் திட்டம் வரவேற்கத்தக்கது ஒன்று என்றவர் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.கோவை விமான நிலையத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் விவசாய பொருட்களை சேகரித்து வைக்க நிதி ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றார். மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைத்தால் சிறு,குறு தொழில் முனைவோருக்கு உதவிகரமாக இருக்கும் என்றவர் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது வரவேற்கத்தக்கது என்றார்.