செயற்கையாக பழுக்க வைத்த பலாப்பழங்கள் பறிமுதல்

விராலிமலை காமராஜ்நகர் வாரச்சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த பலாப்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-06-04 04:45 GMT

விராலிமலை காமராஜ்நகர் வாரச்சந்தையில் விற்கப்படும் செயற்கை முறையில் பழுக்க வைத்த பலாப்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, பலா காய்களில் ரசாயன ஊசி செலுத்தி காயை பழமாக்கி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்த பலாப்பழங்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News