மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-26 15:01 GMT
மணல் கடத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது செய்யாற்று படுகையில் இருந்து மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை விட்டுவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.