கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற பொருட்கள் பறிமுதல் !
ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.35,30,731 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 1037 பேர் கைது செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-06-15 07:11 GMT
உணவு பாதுகாப்பு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கடந்த 01.05.2024 முதல் 31.05.2024 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.35,30,731/- (ரூபாய் முப்பத்து ஐந்து வட்சத்து முப்பதாயிரத்து எழுநூற்று முப்பத்து ஒன்று மட்டும்) மதிப்புள்ள 3995.67 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி. 126 எரிவாயு உருளைகள். 104 லிட்டர் பொது விநியோகத்திட்ட மண்ணெண்ணெய், 305 கிலோ கோதுமை, 25 கிலோ துவரம்பருப்பு, 24750 லிட்டர் கலப்பட டீசல் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 175 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. குற்றச்செயலில் ஈடுபட்ட 1032 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.