ஆவணங்கள் இன்றி எடுத்துசெல்லப்பட்ட பணம் பறிமுதல்

ஆம்பூர் அருகே மினி டாடா ஏசி வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 81 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-20 01:54 GMT

பணம் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம்,  வாணியம்பாடி அருகே ஆவணமின்றி தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்ப கொண்டு சென்ற 2,54,000 ரூபாய் பறிமுதல். வாகன தணிக்கையின் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சோபனா தலைமையில் அதிகாரிகள் வாகன தணிகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலாஜி என்பவர் வாணியம்பாடி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு திம்மம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம்(டாடா இண்டிகோ ஏ.டி.எம்மில்) நிரப்ப இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையில் அதிகாரிகள் வாகனத் தணிகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலாஜி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.அதில் அவர் வைத்திருந்த பையில் அவணமின்றி ரூபாய் 2 லட்சத்து 54 ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

Tags:    

Similar News