ஆவணங்கள் இன்றி எடுத்து வரபட்ட பணம் பறிமுதல்
உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 12 லட்ச ரூபாய் பணம் பறிமுதல். தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்;
Update: 2024-03-21 01:46 GMT
பணம் பறிமுதல்
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட சேசம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது நேற்று மாலை சந்தேகம் படும் படியாக வந்த வாகனம் ஒன்றினை நிறுத்தி சோதனையி்ட்டதில் உரிய ஆவணங்களின்றி 12 லட்ச ரூபாய் பணம் இருப்பதை கவனித்தை தொடர்ந்து உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர், முறையான ஆவணங்கள் இல்லாததை தொடர்ந்து பணத்துடன் வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர். தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் பணம் வங்கி ஏ டி எம் மில் நிரப்புவதற்காக எடுத்துசெல்லப்பபடுவதாக கூறப்படும் நிலையில் பணத்திற்குண்டான உரிய ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர் விசாரணை தொடர்கிறது இந்த நிலையில் தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 12 லட்சம். வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.