அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள் இடையே மோதல் !
நத்தம் பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 06:22 GMT
மோதல்
மோதல்
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பஸ் நிலையத்ததில் இருந்து திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், தேனி உள்ளிட்ட பல்வேறு வழிதடங்களுக்கு பஸ்கள் இயக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை பணிமலையில் இருந்து புதுக்கோட்டை-திண்டுக்கல் நோக்கி செல்லும் நத்தத்தில் வந்தது. அப்போது அதை நத்தம் பணிமனையில் இருந்து நத்தத்திலிருந்து- திருப்பூருக்கு செல்ல வேண்டிய பேருந்தை எடுக்காமல் நின்று கொண்டிருந்தது. இதனால் புதுக்கோட்டையில் இருந்த வந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் - திருப்பூர் செல்ல கிளம்பிய அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பி ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். இதனால் இரண்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.