கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் மோதல்

சேலம் மாவட்டம், இலுப்பநத்தம் பகுதியில் கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பான தகராற்றில் விவசாயி படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-24 09:09 GMT

கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் தகராறு

சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே இலுப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ராமசாமி(55). இவரது உறவினரான ஆறுமுகம் மகன் சரவ ணன் (38). இருவரின் விவசாய நிலத்துக்கும் சேர்த்து பொது கிணறு உள்ளது. இதில் விவசாய நிலத்துக்கு தண்ணீர் எடுத்து விடுவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி, இருவருக்கும் தண்ணீர் எடுத்து விடுவதில் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சரவணன், ராமசாமியின் பலமாக தாக் கியதில், அவரது வலது கை எலும்பு முறிந்தது. சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில், வீரகனூர் எஸ்ஐ கார்த்திக் வழக்கு பதிவு செய்து, சரவணனை நேற்று கைது செய்தார்.

Tags:    

Similar News