காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
தமிழகத்தில் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்
இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிபத்திரி சூலக்கரை பெரிய வள்ளி குளம் பாலவநத்தம் குல்லூர்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இன்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் இன்று கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது மக்கள் மத்தியில் பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தார் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தப் படும் எனவும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு 400 ரூபாய் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றார்.
மேலும் தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையில் இதுவரை விடுபட்டுப் போயிருந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக வழங்கப்படும் என கூறினார். எனவே மத்தியில் நல்லாட்சி அமைய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.