விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

Update: 2024-03-25 13:43 GMT
வேட்பு மனு தாக்கல் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார். 

விருதுநகரில் வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளார் மாணிக்கம் தாக்கூர், இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இது இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் தேர்தல். இந்தியா ஒரு பாசிச சக்தியின் கைகளில் சிக்காமல் தடுத்து நிறுத்துவதற்கான கடைசி வாய்ப்பு.

50 நாட்களுக்குள் 2 மாநில முதல்வர்களை மத்திய அரசு அதன் அமைப்புகள் மூலம் கைது செய்துள்ளது. இந்த அரசை இப்போது வீழ்த்தாவிட்டால். 2029ல் ரஷ்யாவில் அமைந்த புதின் ஆட்சி முறை போன்ற ஆட்சி இங்கே வரும் இந்தியா முழுவதும் அமலாக்கத் துறையின் சட்டவிரோத கைது நடவடிக்கைகள் தொடர்கிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் அனைத்து நிதி ஆதாரங்களும் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைப்புகளை தனக்கு ஆதாயம் தரும் வகையில் மத்திய அரசு பயன்படுத்திக்க் கொள்கிறது.

இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும். விருதுநகருக்கான திட்டங்கள் எல்லாம் காகிதத்தில் தான் இருக்கின்றன. விருதுநகரை பாஜக மோடி அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது. ஆனால், இண்டியா கூட்டணி ஆட்சி விருதுநகருக்கு தீர்வுகளைக் கொண்டுவரும் என்றார். விருதுநகர் தொகுதியில் திரைப்பிரபலங்கள் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “மக்களாட்சியில் அனைவருக்கும் பங்கு உண்டு. அதனால் திரைத்துறையினரும் நிற்கலாம்.

ஆனால், தேர்தலில் கொள்கைகளை, வாக்குறுதிகளைக் கூறியே வாக்கு சேகரிக்க முடியும் ஒருவரின் தொழிலை வைத்து அல்ல” என்று மாணிக்கம் தாக்கூர் பேசினார். பேட்டி: மாணிக்கம் தாகூர் (பாராளுமன்ற உறுப்பினர்) - விருதுநகர்

Tags:    

Similar News