கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றி

கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 1,92,486 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.;

Update: 2024-06-05 01:35 GMT

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றி

கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், அதிமுக ஜெயபிரகாஷ், பாஜக நரசிம்மன், நாம் தமிழர் கட்சி வித்யாராணி வீரப்பன், சுயேச்சைகள் உட்பட 27 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டன. அதன்படி முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வந்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 29 சுற்றுகள் எண்ணப்பட்டன. மேலும், அஞ்சல் வாக்குகள் பிரித்து எண்ணப்பட்டன. அதன்படி இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 4,92,883 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 3,00,397 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் 1,92,486 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எம்.சரயு, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்திற்கு வழங்கினார். அப்போது, திமுக மாவட்ட செயலாளர்கள் மதியழகன் எம்எல்ஏ, பிரகாஷ் எம்எல்ஏ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பட்டாசுக்கள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் மறைந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி வீரப்பன் டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News