காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் - எஸ்பிக்கு உத்தரவு
நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.;
Update: 2024-05-12 01:53 GMT
எஸ்பி சிலம்பரசன்
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஒரு வாரம் ஆகியும் இதுவரை எந்த ஒரு துப்பும் துலங்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனுக்கு உயர் அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த வழக்கை முடித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என நேற்று உத்தரவிட்டுள்ளனர்.