சேலம் : காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கூட்டம்

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறுபான்மை பிரிவு கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.;

Update: 2024-01-06 09:03 GMT

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுறை சார்பாக சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா கலந்து கொண்டு பேசினார். மேலும் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் அஷ்ரப் அலி, துணை மேயர் சாரதாதேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷாநவாஸ், சிறுபான்மை பிரிவு மாநகர தலைவர் பர்வேஷ், மாநிலத் துணைத் தலைவர் யாக்கோப் மாநகரத் துணைத்தலைவர் திருமுருகன் சிறுபான்மை பிரிவு மாநகர துணை தலைவர் அலாவுதீன், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அஹமது, ராமன் வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் ரஞ்சித்குமார், பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News