கல்வெட்டை திறந்த காங்., எம்பி - கடும் கோபமடைந்த பாஜக நிர்வாகி
ஓசூரில் ரயில்வே நிலைய வளர்ச்சி பணிகளை பிரதமர் காணொளி வாயிலாக திறந்து வைத்தபோது கல்வெட்டை திறக்க காங்கிரஸ் எம்பியை அழைத்ததால் ஆத்திரமடைந்த பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் வசைகளை பொழிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடி செலவில் 553 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டி, கோமதிநகர் ரயில் நிலையத்தை திறந்து வைத்தார்.இதேபோல் ஓசூர் ரயில் நிலையத்தை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இப்பகுதி மக்களை வரவேற்பை பெற்றுள்ளது இதற்கு இப்பகுதி மக்கள் பிரதமருக்கு நன்றியை தெரிவித்தனர்,
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் மற்றும் மாவட்ட பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி நிறைவிற்கு பிறகு ஒசூர் இரயில்வே நிலையத்தில் கல்வெட்டு திறக்கப்பட்டபோது இரயில்வே அதிகாரி விஜயகுமார் எம்பி செல்லகுமாரை அழைத்து கல்வெட்டு திறந்ததால் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ( தமாகா முன்னாள் கிருஷ்ணகிரி எம்பி) நரசிம்மன் காங்கிரஸ் எம்பியை அழைத்து தன்னை அழைக்காததால் கடும் அதிருப்தியடைந்தார்.
ரயில்வே அதிகாரி விஜயகுமாரிடம் கடிந்துக்கொண்ட நரசிம்மன் பேசியது: இந்த நாயி இங்க வந்து கதவுட்டுனு இருக்கான் சர்வேயரை கூப்ட மாங்காய்காரன கூப்ட ம*** கூப்டனு ஒசூருக்கு ரயில்வே மந்திரி வந்தப்போ நீயேண்டா வரல.. அங்க போய் தனியா பாத்தனாம் ப்ராடு கார பையன் அவனுக்கு புத்தியில்ல,
அவன் பின்னாடி நிக்குற காங்கிரஸ் காரணுக்கு இன்னும் புத்தியில்ல என்று பேசியபோது படம் பிடித்த பத்திரிகையாளர்களை அதையேன்பா எடுக்குறீங்க நீங்க எடுத்தாலும் நாய்ங்க தான், எடுக்காட்டியும் நாய்ங்க தான்.5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதை போல விஜய்குமார் அவனை பார்த்து பயப்படுற, அவன் புறம்போக்கு கவுன்சிலரா கூட ஜெயிக்க மாட்டா இனிமே காங்கிரஸ் எம்பியை அழைத்து நிகழ்ச்சியை நடத்தினால் நாங்கள் வர மாட்டோம் என எச்சரித்தார்.கிருஷ்ணகிரி எம்பியாக வெற்றி பெற்ற ஒரு வருடத்திற்குள் ஜோலார்பேட்டை முதல் ஒசூர் வழியாக ரயில்வே பாதையை கொண்டுவராவிட்டால் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக கூறியவனை மேடை ஏற விட்டதே தப்பு என்றார். என்னதான் ஆளுங்கட்சி பாஜக என்றாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எம்பி காங்கிரஸ் தானே, அவரை அப்படி பேசலாமா என பலரும் முனுமுனுத்து சென்றனர்.