காங்கிரஸ் - நாம் தமிழர் கட்சியினர் மோதல் : 20 பேர் மீது வழக்கு

குளச்சல் அருகே வாக்குபதிவின் போது மோதலில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Update: 2024-04-21 06:39 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே  வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் குருசு. இவர் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் வாணிய குடி ஜேம்ஸ் உயர் நிலை பள்ளியில் 70-ம் வாக்குசாவடியில் நாம் தமிழர் கட்சியின் முகவராக செயல்பட்டார்.    அப்போது அங்கு ஒரு சிலர் கள்ள ஓட்டுபோட முயன்றுள்ளனர். இதை குருசு நாம் தமிழர் கட்சியின் குளச்சல் தொகுதி தலைவர் ரூபன் (37) என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

ரூபன் சம்மந்தபட்ட வாக்குசாவடிக்கு வந்த போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர்.இதனால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ரூபன், காங்கிரசை சேர்ந்த சகாய சாந்தி (53) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பிலும் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News