பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

காங்கேயத்தில் பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-29 07:51 GMT

ஆர்ப்பாட்டம் 

அனைத்து பொதுமக்கள், மீனவர்கள், தொழிலாளர்களுக்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் விரோதமான ஆட்சியை நடத்துகின்ற மோடி தற்பொழுது தமிழகம் வந்துள்ளதை கண்டிக்கும் விதமாக திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள தபால் நிலையம் அருகே தேசிய பொதுக்குழு உறுப்பினர். திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான. கோபிநாத் பழனியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து விவசாயிகளையும், மீனவர்களையும் வஞ்சிக்கும் விதமாக செயல்பட்டு வருவதாக கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்தியில் ஆளும் மக்கள் விரோத பாஜக மோடி ஆட்சியில் பொருளாதார கொள்கையால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பூரில் பின்னலாடை தொழில் மிக மோசமான நிலைமை உருவாகி இருக்கிறது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து பல தொழிலதிபர்கள் கடன் சுமையால் நிறுவனங்களை இழந்து வாழ வழி இன்றி சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கேயம், அன்னூர்,வெள்ளகோவில்,பல்லடம், அவிநாசி,ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் 100க்கு மேற்பட்டோர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News