சாத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காங்கிரஸ் கட்சி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்களில் கருப்புதுணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-19 13:13 GMT
கருப்பு துணி கட்டி போராட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக வங்கி கணக்குகளை செயல்படாமல் முடக்கிய மோடி அரசின் வருமானவரித்துறையை கண்டித்து விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தூர் தபால் நிலையம் முன்பு கண்களில் கருப்புதுணி கட்டியபடி மோடி அரசுக்கு எதிராக வருமானவரித்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‌. சாத்தூர் காங்கிரஸ் கட்சி நகர தலைவர் டி.எஸ்.அய்யப்பன் தலைமையில்

நகர,வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும்,இளைஞர் காங்கிரஸ்,மாணவர் காங்கிரஸ்,மகிளா காங்கிரஸ் என ஏராளமானோர் கண்களில் கருப்புதுணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News