பிரதமர் மோடி வருகையை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
சேலத்தில் பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-02-29 07:29 GMT
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கோட்டை மைதானத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணி, பொருளாளர் ராஜகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம், மீன் பிடிக்கும் உரிமையை பாதுகாக்க தவறியதாக கூறி மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சைப்பட்டி பழனிசாமி, துணைத்தலைவர் வரதராஜு, மனித உரிமை ஆணைய மாநில இணை செயலாளர் நிஜாம், மாவட்ட தலைவர் ஷானு, விவசாய பிரிவு தலைவர் சிவகுமார், சிறுபான்மை பிரிவு தலைவர் பர்வேஸ், மண்டல குழு தலைவர் சாந்தமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பிரதமர் மோடி தமிழகம் வந்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.