காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

காங்., சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-12-22 09:36 GMT

காங்., சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைமுன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அவை நடவடிக்கையில் இருந்து இடைநீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து கோஷமிடபட்டது. இதில் அரியலூர் நகர தலைவர் சிவக்குமார், வட்டார தலைவர்கள் கர்ணன் மற்றும் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News