விஜயதரணியை பட்டை நாமத்துடன் வைரலாக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்

விஜயதரணியை பட்டை நாமத்துடன் கிராபிக்ஸ் செய்து காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Update: 2024-03-23 06:23 GMT

விஜயதரணி

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ - யாக  இருந்தவர் விஜயதரணி. இவர் காங்கிரசில் எம்.பியாக போட்டியிட சீட் கேட்டு பலமுறை போராடினார். வாய்ப்பு மறுக்கப்பட்டதால் திடீரென காங்கிரஸில் இருந்து விலகி ஒன்றிய அமைச்சர் முருகன் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்தார். மேலும்  தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். எம் பி சீட்டை குறி வைத்து அவர் பாரதிய ஜனதாவில்  சேர்ந்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு சீட்டு வழங்க மாநில தலைவர் அண்ணாமலை விரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் விஜயதரணி பேசவும்  வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் குமரியில் விஜயதரணி பாரதிய ஜனதாவில் போட்டியிடுவார் என தகவல் பரவியது.  மேலும் அவரது பெயர் இருப்பது போன்ற லெட்டர் பேட் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் கபொன். ராதாகிருஷ்ணனை பாரதிய ஜனதா வேட்பாளராக அறிவித்தது. இதனால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் விஜயதரணிக்கு  வாய்ப்பு வழங்கப்படும் என்று பேசப்பட்டது.  ஆனால் நந்தினி என்ற பெண் வேட்பாளரை  பாரதிய ஜனதா அறிவித்தது. இதனால் அரசனை  நம்பி புருஷனை கைவிட்ட கதையாக எம்பி பதவிக்கு  ஆசைப்பட்டு தனது எம்எல்ஏ பதவியை விஜயதாரணி இழந்துள்ளார் என காங்கிரஸ் கட்சியினர் விஜயதரணி படத்திற்கு பட்டை நாமம் சாத்தியது போல் கிராபிக்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
Tags:    

Similar News