வீரட்டானேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Update: 2024-01-25 05:05 GMT


திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 2.80 கோடி மதிப்பீட்டில் திருப்பணி நடந்து வருகிறது. இதில் விடுபட்ட ஒரு சில சன்னதிகள் உள்ளிட்டவை உபயதாரர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழமை வாய்ந்த கொடிமரம் பழுதடைந்ததால், அது அகற்றப்பட்டு, புதிய கொடிமரம் அமைக்க கோவில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது.

நகராட்சி சேர்மன் முருகன் உபயத்தில், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 33 அடி உயர புதிய கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்காக காலை 6:30 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, எந்திர ஸ்தாபனம், நவரத்தின பஞ்சலோக ங்கள் போடப்பட்டு கொடிமரம் பிரதிஷ்டை செய்து நிலை நிறுத்தப்பட்டு தீபாரதனை நடந்தது.

Tags:    

Similar News