நாகையில் வேட்பு மனுத்த பரிசீலனை
நாகையில் வேட்பு மனுத்த பரிசீலனை நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 29.நாகப்பட்டினம்(தனி) பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், தலைமையில்,
நாகப்பட்டினம் பொது தேர்தல் பார்வையாளர் பி.பாரதி லக்பதி நாயக், முன்னிலையில் நடைபெற்றது. 29.நாகப்பட்டினம்(தனி) பாராளுமன்ற தொகுதிக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று (28.03.2024) நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால், நாகப்பட்டினம் பொது தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் கூர்ந்தாய்வு செய்யப்பட்டது.
மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 13 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் 10 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 3 மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டன.
ஒரு வேட்பாளர் வேட்பு மனுவினை திரும்பப் பெற்றார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) .பி.கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.