பக்தர்களை அனுமதிக்க பரிசீலனை: போராட்டம் ஒத்திவைப்பு

திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் பக்தர்களை இலவசமாக ரூ.100 கட்டண வரிசையில் தரிசனம் செய்ய அனுமதிக்க அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சமாதான பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டது. 

Update: 2024-02-05 05:06 GMT

திருச்செந்தூர் முருகன் கோவில் 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ளூர் பக்தர்களை 100 கட்டண தரிசன வரிசையில் செல்வதை தடுப்பதை கண்டித்து அனைத்து சமுதாய மக்கள் நல இயக்கத்தினர் மற்றும் இந்து மகா சபா சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இப்ப பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்படுத்த திருச்செந்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது ஆர்டிஓ குருச்சந்திரன் தலைமை வகித்தார்.

தாசில்தார் பாலசுந்தரம், கோயில் இன்ஸ்பெக்டர் தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் பக்தர்களை ரூ.100 கட்டண தரிசனம் வழியாக பக்தர்களை இலவசமாக அனுமதி அளிப்பது தொடர்பாக கோயில் இணை ஆணையரால், அறநிலையத்துறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்கள் வசிப்பிட ஆதாரத்துடன் வந்தால் சாதாரண நாட்களில் அபிஷேக நேரத்தை தவிர்த்து மாலை 3:00 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் எனவும், உள்ளூர் பக்தர்களுடன் வேறு யாரையும் அழைத்து வரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை போராட்ட குழுவினர் ஏற்றுக் கொண்டனர்.  மேலும் அனைத்து நாட்களிலும் உள்ளூர் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், வரும் 28ம் தேதிக்குள் உத்தரவைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று போராட்டக் குழுவினர் சாலை மறியல் போராட்டத்தை ஒத்தி வைத்தனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமுதாய மக்கள் நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோடீஸ்வரன், வக்கீல் பிரகாஷ், செந்தூர் அனைத்து வியாபாரி சங்க நிர்வாகி கார்க்கி சேகர், அஜித்குமார், வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News