மேட்டூரில் காவலர் பயிற்சி நிறைவு விழா

சேலம் மாவட்டம், மேட்டூரில் காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.;

Update: 2024-01-06 07:36 GMT

மேட்டூரில் காவலர் பயிற்சி நிறைவு விழா 

சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே குள்ள வீரன் பட்டியில் காவலர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இதில் கடந்த ஏழு மாதமாக பயிற்சி பெற்ற 485 இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா  நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சேலம் காவல் ஆணையாளர் பா. விஜயகுமாரி கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கவாத்து, சட்டம், ஆயுதம் கையாளுதலில் சிறப்பாக பயிற்சி பெற்ற 12 பயிற்சி காவலர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை காவல் ஆணையாளர் பா. விஜயகுமாரி வழங்கினார். மேலும் பயிற்சி பள்ளி காவலர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement

அதனைத் தொடர்ந்து பயிற்சிக் காவலர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சி காவலர்கள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு நவீன ஆயுதங்களை கழற்றி பூட்டி அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர துணை கமிஷனர் ராஜேந்திரன், பயிற்சி பள்ளி முதல்வர் நாகராஜ், மேட்டூர் காவல் கண்காணிப்பாளர் மரியமுத்து, மேட்டூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், கருமலை கூடல் ஆய்வாளர் குமரன் காவலர் பயிற்சி பள்ளி அதிகாரிகள் பயிற்சி காவலர்களின் குடும்ப உறுப்பினர்கள் என 1,000கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News