மதுரை ரயில்வே அலுவலகத்தில் அரசியலமைப்பு தினம் அனுசரிப்பு
மதுரை ரயில்வே அலுவலகத்தில் அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.;
அரசியலமைப்பு தினம் அனுசரிப்பு
மதுரை ரயில்வே அலுவலகத்தில் அரசியலமைப்பு தினம் அனுசரிப்பு சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக அரசியல் அமைப்பு சட்டம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 அன்று அமலுக்கு வந்தது. அதைக் கொண்டாடும் வகையில் வருடம் தோறும் நவம்பர் 26 அன்று அரசியல் அமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். எனவே மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் திங்கட்கிழமை அன்று அரசியல் அமைப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
மதுரை ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா இந்திய அரசியலமைப்பு சட்ட உறுதிமொழியை வாசித்தார். அதை கூடியிருந்த ரயில்வே அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் திரும்ப வாசித்து வழிமொழிந்தனர். இந்தியாவை இறையாண்மை, சமத்துவ மதசார்பற்ற ஜனநாயக குடியரசாக தொடரவும், அதன் மக்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைக்கவும்,
சிந்தனை, கருத்து, நம்பிக்கை, வழிபாட்டு சுதந்திரம் அளிக்கவும், சம உரிமை, சம வாய்ப்புகள் வழங்கிடவும், தனிநபர் கண்ணியம் காத்து தோழமையுடன் செயல்படவும், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் சி.செல்வம், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி.சங்கரன் ஆகியோர் உட்பட அதிகாரிகளும் அலுவலர்களும்கலந்து கொண்டனர்.