சேதுபாவாசத்திரம் அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி துவக்கம்
சேதுபாவாசத்திரம் அருகே குடிநீர் தேவைக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கெங்காதரபுரம் ஊராட்சி, குண்டாமரைக்காடு கிராமத்தில், ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த ஆழ்துளைக் கிணறு பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிதண்ணீருக்காக அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில், திமுக தலைமை பொதுக் குழு உறுப்பினர்
அ.அப்துல் மஜீத், வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, ஊராட்சி பொறியாளர் மணிமேகலை, திமுக மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் செருவாவிடுதி பன்னீர்செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி பழனிவேலு, திமுக ஒன்றியச் துணைச் செயலாளர் ராஜ்குமார், கிளைச் செயலாளர் சரவணன், பன்னீர்செல்வம், ஊராட்சி செயலாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.