மூடு கால்வாய் அமைக்கும் பணி

பல்லாவரத்தில் ரூ.33 கோடியில் 3 கி.மீ. தூரம் மூடு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

Update: 2024-03-16 07:36 GMT

பல்லாவரத்தில் ரூ.33 கோடியில் 3 கி.மீ. தூரம் மூடு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

மழைக்காலத்தில் பல்லாவரம் மூவரசம்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கே. ஜி .கே. நகா், அன்பு நகா், பிருந்தாவன் காலனி, திருவள்ளுவா் நகா், அம்பாள் நகா் மற்றும் கீழ்க்கட்டளை குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்களிடையே இது பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அப்பகுதி மக்கள் வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். அதன் பேரில், இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், நீா்வள ஆதாரத் துறை சாா்பில் ரூ.33 கோடியில் சுமாா் 3 கி.மீ. தூரம், 3 மீட்டா் அகலம், 2 மீட்டா் ஆழம் கொண்ட மூடு கால்வாய் அமைக்கும் திட்டப்பணியை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி தொடங்கி வைத்தாா். நிகழ்வில் மண்டலக் குழு தலைவா் ஜோசப் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News