கோரிப்பாளையத்தில் மேம்பால கட்டுமான பணிகள் துவக்கம்

கோரிப்பாளையத்தில் மேம்பால கட்டுமான பணிகள் துவக்கப்பட்டதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-01 14:29 GMT

கோரிப்பாளையத்தில் மேம்பால கட்டுமான பணிகள் துவக்கப்பட்டதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைப்பெறுவதால் போக்குவரத்து மாற்றம்- போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையிலான பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, 1-7-2024ம் தேதி நாளை முதல் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

பெரியார் பேருந்துநிலையம் மற்றும் செல்லுார் புதுப்பாலம் வழியாக வரும் வாகனங்கள் MM லாட்ஜ். F2,E2 சாலை, அரசன் பேக்கரி, நவநீதகிருஷ்னன் கோயில் சந்திப்பு. கோகலே ரோடு, IOC ரவுண்டானா வழியாக வந்து நத்தம் சாலை, அழகர்கோயில் மற்றும் M.G.R பேருந்து நிலையம் செல்ல வேண்டும். * நத்தம் சாலை, அழகர்கோவில் சாலையிலிருந்து வரும் அரசு மாநகர பேருந்துகள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டும் அவுட் போஸ்ட் வழியாக தமுக்கம் சந்திப்பு வந்து, அங்கு வலதுபுறம் (Wrong Right) திரும்பி North Gate, தமிழரசி பேக்கரி, கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக AV பாலம் செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் தமுக்கம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காந்தி மியூசியம் வழியாக செல்ல வேண்டும்.

M.G.R பேருந்து நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச் கே.கே.நகர் 80 அடிச்சாலை, ஆவின் சந்திப்பு, ஆசாரிதோப்பு சந்திப்பு, வைகை வடகரை ரோடு, செல்லூர் ரவுண்டானா, தத்தனேரி மெயின் ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்ல வேண்டும். * நத்தம் மற்றும் அழகர் ரோடு வழியாக ஆரப்பாளையம் மற்றும் பெரியார் செல்லும் கனரக மற்றும் வணிக பயன்பாட்டு வாகனங்கள் அவுட்போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகர் ஆர்ச், கே.கே.நகர் 80 அடி சாலை, ஆவின் சந்திப்பு, சாத்தமங்கலம் ரோடு, பனகல் ரோடு, கோரிப்பாளையம் சந்திப்பு, AV பாலம் வழியாக வந்து கீழவெளிவீதி மற்றும் யானைக்கல், வடக்குமாரட் வீதி செல்ல வேண்டும். 01.07.2024 நாளை முதல் இந்த போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளதாக மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News