கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி

கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2024-02-28 11:15 GMT
கன்னியாகுமரி கூண்டு பாலப் பணி அமையும் பகுதியை பார்வையிட்ட அமைச்சர்

சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில்  விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று  சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.       இந்த கோரிக்கையை ஏற்று விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் மைக்க நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வைப்புநிதியாக ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.      

இந்த பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆகியோர் இன்று (28.02.2024) நேரில் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-  இந்த கண்ணாடி கூண்டு பாலத்தின் கட்டுமான பணிகள்  இரண்டு மாதத்திற்குள் முடிவடைந்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்க கொண்டுவரப்படும் என கூறினார்.        நடைபெற்ற ஆய்வுகளில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டிபன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News