ரயில் நிலையத்தில் லிப்ட் அமைக்கும் பணி

மேல்மருவத்துார் ரயில் நிலையத்தில் லிப்ட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Update: 2024-02-25 13:58 GMT
ரயில் நிலையத்தில் லிப்ட் அமைக்கும் பணி
மேல்மருவத்துார் ரயில் நிலையத்தில், நான்கு நடைமேடைகள் அமைந்துள்ளன. இந்நிலையத்திற்கு, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு செவ்வாடை பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூச இருமுடி விழா, ஆடிப்பூரம், பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா, சித்தரா பவுர்ணமி விழா காலங்களில், தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த செவ்வாடை பக்தர்கள், லட்சக்கணக்கானவர்கள் விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் வருவர். மேலும், மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை, பவுர்ணமி நாளில், ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வர். இதுமட்டும் இன்றி, மேல்மருவத்துாரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த கிராமவாசிகள், அரசு மருத்துவமனை, அத்தியாவசிய பணி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர் என, தினமும் 10, 000த்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இதனால், ரயில் நிலைய நடைமேடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் லிப்ட் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, செவ்வாடை பக்கர்கள் மற்றும் கிராமவாசிகள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, ரயில் நிலையத்தின் 1, 2, 3வது நடைமேடைகளில், தலா ஒரு லிப்ட் அமைக்க, 1. 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், லிப்ட் அமைக்கும் பணிகளை துவக்கி நடந்து வருகிறது.
Tags:    

Similar News